×

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி இறுதிகட்டம்..!!

திருச்சி: பிரதமர் வருகையையொட்டி ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு முக்கிய கோவில்களில் தரிசனம் மேற்கொள்கிறார். அந்த வகையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதன் கோயிலில் தரிசனம் மேற்கொள்வதற்காக நாளை தினம் வருகை தரவுள்ளார். திருச்சி விமான நிலையத்திற்கு 10:30க்கு வருகை தரும் பிரதமர் மோடி, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக ஸ்ரீரங்கம் கோயில் அருகே அதாவது கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் யாத்திரை நிவாஸ் தங்கும் விடுதிக்கு எதிராக இருக்கக்கூடிய கோயிலுக்கு சொந்தமான இடத்தில், 3 பிரத்யேக ஹெலிபேட் தளம் அமைக்கும் பணியானது நேற்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, பிரதமர் வருகையையொட்டி ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த ஹெலிபேட் தளத்திற்கு வருகை தரும் பிரதமர் இங்கிருந்து சாலை மார்க்கமாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு சென்று அங்கு 11 மணியில் இருந்து 12:30 மணி வரை தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் இதே ஹெலிபேட் தளத்திற்கு வருகை தந்து ஹெலிகாப்டர் மூலமாக ராமேஸ்வரம் செல்லவுள்ளார். பிரதமரின் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். திருக்கோவிலை சுற்றியுள்ள கடைகள் அனைத்தும் நேற்று மாலை முதல் அடைக்க வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. காலை 10.30 மணிக்கு மேல் ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

The post பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி இறுதிகட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Srirangam ,Narendra Modi ,Ram ,Ayodhya ,Aranganathan temple ,
× RELATED திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர்...